ரயிலில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

769

ரயிலில் மீட்கப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களான இளம் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னர் குழந்தையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி லக்ஷான் டயஸ் தெரிவித்த உண்மைகளை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டி.என்.ஏ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக குழந்தை மற்றும் சந்தேகநபர்களை எதிர்வரும் 21ம் திகதி அரசு பரிசோதகர் முன் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here