உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் மேலும் தாமதம்

503

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்காமையே தோல்விக்கு முக்கிய காரணமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டின் போது நாளொன்றுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, ஒரு தொழிலாளியின் தினசரி சம்பளத்திற்கு சமமாக இல்லை என்பது வேதனையான உண்மை என்றும் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான சூழல் இல்லாத காரணத்தினால் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here