எரிபொருள் நுகர்வோருக்கு அடுத்தமாதம் நிவாரணம்

1176

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது. இலங்கை ரூபாயின் பெறுமதி கூடியுள்ளது. ஆகையால், எரிபொருள்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் காஞ்சன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையை மேம்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here