நீர் திட்டத்தில் புதிய நீர் இணைப்புகள் 25 ஆம் திகதி ஆரம்பம்

163

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 440 கிராமசேவை பிரிவுகளில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூ றினார்.

இதன்படி, பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் அத்தனகல்ல மற்றும் பஸ்யால பகுதிகளுக்கு புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், நிட்டம்புவ, மினுவாங்கொடை மற்றும் கம்பஹாவைச் சுற்றியுள்ள பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here