follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுமாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது

மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது

Published on

இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை துணிகளில் 70% வீதமானவை, சீன அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைத்துள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வர்த்தகர்களால் எஞ்சிய சீருடை துணிகள் வழங்கப்படுகின்றன. இந்தியக் கடன் உதவியின் கீழ் மூலப் பொருட்களைப் பெற்று அரச அச்சகக் கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு விநியோகஸ்தர்களால் அச்சிடப்பட்ட பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவை உத்தியோகபூர்வமாக இதன் போது விநியோகிக்கப்பட்டன.

அரச பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் படிக்கும் தேரர்களுக்கும் இந்த சீருடை துணிகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...