சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த தினம் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.