follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுஅடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு மேலும் ஒரு கடன் வசதி

அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு மேலும் ஒரு கடன் வசதி

Published on

எதிர்வரும் சில நாட்களுக்குள் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் சியோ கந்தா (Chiyo Kanda) மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

குறித்த கடன் தொகை கிடைத்தவுடன் இலங்கையின் அடுத்த கட்ட பொருளாதார நகர்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல்கள் உலக வங்கியுடன் இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ...

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...