நியூஸிலாந்திடம் 198 ஓட்டங்களால் இலங்கை தோல்வி

236

இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து 198 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து 49.3 ஓவர்களில் 274 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 76 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி இப்போட்டியில் தோல்வியடைந்ததால், எதிர்வரும் உலகக்கிண்ண சுற்றுப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழங்கை இழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here