சிகிரியாவை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை தயாரிக்க அனுமதி

351

சிகிரியாவை நிலைபெறுதகு பயண மையமாக அபிவிருத்தி செய்வதற்காக பிரதான திட்டத்தை ((Master Plan) தயாரிப்பதற்காக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலக மரபுரிமையாகவும், இலங்கையின் முக்கிய தொல்லியல் இடமாகவும், சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிமிக்க சுற்றுலா மையமாக அமைவதுடன், அது எமது நாட்டின் சுற்றுலா மையங்களில் அதிகளவான வருமானத்தை ஈட்டுகின்ற இடமாகவும் அமைந்துள்ளது.

ஆனாலும் சுற்றுலா மையமாக அதனை முகாமைத்துவப்படுத்தும் போது மேலெழுகின்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு குறித்த அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களுடன், சிகிரியாவை நிலைபெறுதகு பயண மையமாக அபிவிருத்தி செய்வதற்காக பிரதான திட்டத்தை ((Master Plan) தயாரிப்பதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் மற்றும் புத்தசாசன, கலாச்சார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here