இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

238

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் (29) நிறைவடைய உள்ளன.

பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கமைய, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தாய்லாந்து சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துகொள்வது மாத்திரமின்றி, அந்த பொருளாதாரச் சந்தையினூடாக ஏனைய ஆசியான் நாடுகளின் பொருளாதார சந்தைகளுக்கான பிரவேசத்தை அதிகரித்துக்கொள்ளதுடன் தற்போது காணப்படும் சுங்க வரி அல்லாத தடைகளை குறைத்துகொள்வதே இலங்கை தரப்பு பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

மேற்படி 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக தாய்லாந்து வர்த்தக கலந்துரையாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவுரமன் சுப்தாவீதும் (Auramon Supathaweethum) தலைமையில் 35 அதிகாரிகள் உள்ளடங்களான தாய்லாந்து தூதுக் குழு மார்ச் 26 ஆம் திகதி இந்நாட்டை வந்தடைந்தது.

அதேபோல், இருநாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற நீண்ட கால சமய மற்றும் கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் தாய்லாந்து குழுவினரால் கங்காராம விகாரைக்கு 500 அன்னதானப் பாத்திரங்கள் நன்கொடையளிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here