follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமுச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது

Published on

எரிபொருள் விலை குறைப்பின் அடிப்படையாகக் கொண்டு முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழில் முயற்சியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 60 ரூபாவிலிருந்து குறைக்கப்பட்டுள்ளதால் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்குமாறு முன்வைக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கத்தின் தலைவர் மெரில் திஸாநாயக்க தெரிவித்தார்.

டயர்களின் விலை, பராமரிப்புச் செலவுகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மக்கள் முச்சக்கரவண்டி பாவனையை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

பெட்ரோல் விலைக் குறைப்பினால் முச்சக்கர வண்டி உரிமையாளருக்கு கிலோமீற்றருக்கு 3 ரூபா நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் ஏனைய உயர் செலவுகளுடன் ஒப்பிடுகையில் அது சொற்பமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கவே முடியாது என.மெரில் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...