வெளிநாடு செல்லும் பெண்களுக்கு NVQ சான்றிதழ் கட்டாயம்

944

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here