எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

349

பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டாலும், குறித்த அந்த முடிவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், இதற்கு முன்னரும் மக்களால் எதிர்க்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்கம் வாபஸ் பெற்றாலும், பின்னர் தமது பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே,அரசாங்கம் இந்த பங்கரவாத சட்டத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால், அது தொடர்பில் தெளிவான எழுத்துமூல அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

இதனால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கூட மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here