இரகசிய அமெரிக்க ஆவணங்கள் கசிந்தமை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து – பென்டகன்

410

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்கள் கசிந்தமை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பான அமெரிக்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்திருப்பது, அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு “மிகவும் தீவிரமான” ஆபத்தை அளிக்கிறது என்று பென்டகன் கூறியது.

ஆவணக் கசிவிற்கான மூலத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆவணங்கள் மாற்றப்பட்டிருக்கலாமென சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணையதளத்தில் பரவும் ஆவணங்கள் “தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று பொது விவகாரங்களுக்கான பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் Chris Meagher செய்தியாளர்களிடம் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here