கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு

647

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியுடன் விலை அதிகரிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டது

எவ்வாறாயினும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை இன்று 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபா வரை அதிகரித்துள்ளது.

எனினும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் நிர்ணய விலை 1300 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

1300 ரூபாவை விட அதிக விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சியை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here