follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடுகொழும்பில் முதலாவது வாகன தரிப்பிடம் திறப்பு

கொழும்பில் முதலாவது வாகன தரிப்பிடம் திறப்பு

Published on

தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளது.

இவற்றில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் மற்றைய இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் தனியார் நிறுவனத்தினாலும் நிர்மாணிக்கப்படும்.

கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக, நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை பகுதிகளில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில், தனியார் துறையினரின் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு 02, யூனியன் பிளேஸ் பொது வாகன தரிப்பிடம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் நேற்று (25) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 1,400 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வாகனத தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் உரிமையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படுகிறது.

இந்த எட்டு மாடி வாகன நிறுத்துமிடம் சுமார் 300 வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டது. வாகனத தரிப்பிடத்தின் செயல்பாடு கணினிகள் மூலம் செய்யப்படுகிறது. இதில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதாந்த வருமானத்தில் பெறப்படும் வருமானத்தில் 20% நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...