கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

257

கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கொரிய மொழி ஆற்றலுடன் தயாரிப்பு பிரிவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத்துறையில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தயாரிப்புத் துறைகளில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து, இணையத்தளத்தில் பதிவை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக கப்பல் கட்டுமானத்துறையில் தொழில் வாய்ப்பிற்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இணையத்தள பதிவு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்பதனால், அதற்கு முன்னர் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here