எமது நாட்டில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை தொடர்பில் தேசியக் கொள்கை இல்லாததால், சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து கூடிய விரைவில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று(27) கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்ட பின்னரே ஒன்றிணைந்த தேசியக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இத்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உரிய விடய அறிவும், பிரயோக ரீதியான அறிவும் இருப்பது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.