உணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

233

நுவரெலியா – நானுஓயா கிளாசோ பிரதேச ஆரம்பப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

மேலும் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், உணவு விஷம் காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவின் சில மாதிரிகள் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களின் சில மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவு மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனுராதபுரம் உணவு தரக் கட்டுப்பாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here