follow the truth

follow the truth

June, 7, 2024
Homeஉள்நாடுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின பேரணி இரத்து

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின பேரணி இரத்து

Published on

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் – தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

எனினும், தோட்டவாரியாக மிகவும் எளிமையான முறையில் மேதின நிகழ்வுகளை நடத்துமாறு தோட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று கூடியத போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி மே தினக் கூட்டத்துக்காக செலவிடும் பணத்தை, மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தோட்டவாரியாக நடத்தப்படும் மேதின நிகழ்வுகளின்போது, தோட்ட நூலகத்துக்கு நூல்களை வழங்குதல் உட்பட கல்விசார் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது ஏற்புடையது எனவும் தலைவர், தலைவிமார்களுக்கு கட்சி மேல்மட்டத்தால் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

நாம் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்

இயற்கைக்கு கட்டுப்படாத எதுவும் இல்லை. எனவே, நாம் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். கடந்த சில நாட்களாக...

வெள்ளத்தை கட்டுப்படுத்த நீரேற்று நிலையங்களை அமைக்க நடவடிக்கை

சமூக சேவை மற்றும் அரசியலுக்கு வந்தது தாம் மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல என்றபடியால், கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்த...

வடக்கின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக...