15 மாவட்டங்களில் டெங்கு ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்

519

15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களாகவே தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளில் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, மேல்மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் வலியுறுத்தி விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் கடந்த 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து மேல் மாகாணத்தில் உள்ள வீடுகள் இன்று முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here