எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து – 10ம் திகதி விவாதம்

276

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

கடந்த 28 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாராளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக 9 ஆம் திகதி மாத்திரம் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மே 9 ஆம் திகதி மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் செஸ் வரி தொடர்பான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 8 கட்டளைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 3 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்தை அடுத்து அனுமதிக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறும்.

மே 10 ஆம் திகதி ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மே 11 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து தனியார் உறுப்பினர் சட்டமூலமான ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மே 12 ஆம் திகதி நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2328/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here