புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது ஈரான்

256

ஈரான் குடியரசில் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நேற்று(04) சுகாதார அமைச்சில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நன்கொடையின் கீழ், இந்த நாட்டிற்கு தேவையான பல மருந்துகள் உள்ளன. புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் ரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிம்மதி அளிப்பதாகவும், அதற்காக இலங்கை பிரஜைகள் சார்பாக ஈரான் மக்கள் உட்பட ஈரான் குடியரசிற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here