பாணந்துறை வாகன விபத்தில் 10 பேர் வைத்தியசாலையில்

384

பாணந்துறை – வலான பிரதேசத்தில் இன்று (7) அதிகாலை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் வெசாக் தோரணங்களை பார்ப்பதற்காக சென்று, மீண்டும் மத்துகம நோக்கி பயணித்து கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த வாகனம் முப்பது அடி உயர மின்கம்பத்தையும் இரண்டு இரும்பு வேலிகளையும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here