பாடசாலை செல்லும் திகதியை அறிவித்தது ஆசிரியர் – அதிபர் சங்கம்

1562

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் எதிர்வரும்  21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவும், 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளனர்.

அன்றைய தினமே பிற்பகல் 2 மணியளவில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  பின்பற்றி நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளோம்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். என அகில இலங்கை ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here