follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉள்நாடுவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Published on

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை 08.30 மணியளவில் 8.80N மற்றும் 88.90Eக்கு அருகில் மையம் கொண்டது.

இது இன்று மாலையில் புயலாக வலுவடைந்து பின்னர் மத்திய வங்கக் கடலில் நாளை தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடும் போது அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்தால் நோயாளி உயிரிழப்பு?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 31 வயதுடைய நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து...

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு உட்பட்டே தனியார் துறையின் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள் வழங்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு குறைவான...

காலியில் தேசிய வைத்தியசாலை

கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது...