எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் மீது SJB வழக்குத் தாக்கல்

258

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கமைய, இதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பூர்வாங்க கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

6.4 பில்லியன் டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்வதற்கும், இத்தொகை, அழிவினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக திறைசேரியில் தனியான கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட தரப்பு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டு மக்களை பணத்திற்காக இறையாக்கி விடலாம் என்று கப்பல் நிறுவனம் நினைத்தால் அது தவறு எனவும், நாம் யாரும் பணத்திற்கு அடிமையானவர்கள் அல்லர் எனவும், நாம் வங்குரோத்து நிலையை அடைந்தாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், எமது நாட்டை அழிக்கவோ, காட்டிக்கொடுக்கவோ, பலிகடாக்கவோ வாய்ப்பளிக்க மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here