follow the truth

follow the truth

June, 4, 2024
Homeஉள்நாடுநாட்டை கட்டியெழுப்ப தொழிநுட்பக் கல்வி மிகவும் அவசியம்

நாட்டை கட்டியெழுப்ப தொழிநுட்பக் கல்வி மிகவும் அவசியம்

Published on

தற்போது வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு தொழிநுட்பக் கல்வி மிகவும் அவசியமானது என்றாலும், தொழில்நுட்பத்துறையை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட பலவேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்மலானை தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதன் மாணவர் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர். இம்மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் கல்வித்துறைக்காக அதிகாரம் இல்லாவிட்டாலும் கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பங்காற்றியதாகவும், எனவே இங்கு கொள்கை வகுப்பு சார்ந்து மட்டுப்படாமல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வளப் பற்றாக்குறை இருந்தால், அந்தக் குறையை நிவர்த்திப்பதற்குத் தேவையானஉதவிகளை வழங்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே, ஏதேனும் உபகரணங்கள் ரீதியாக தட்டுப்பாடுகள் நிலவுவதாக இருந்தால், அது குறித்து தமக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறும், அவ்வாறு தெரியப்படுத்தியதன் பிற்பாடு அது தொடர்பான உபகரணங்கள் எவ்வாறேனும் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைளை மேற்கொள்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தாம்உட்பட ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் எதிர்க்கட்சியின் சம்பிரதாய அரசியல் போக்கை மாற்ற செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில்...

பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கைகளிலேயே

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின்...

ஜூலையில் மின் கட்டண திருத்தம்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (04) மின்சார நுகர்வோர் கட்டண திருத்தப் பிரேரணையை இறுதி...