சமுர்த்தி இயக்கத்தை ஒழித்தால் அரசாங்கத்தில் நீடிக்கப் போவதில்லை – ஜகத் குமார

641

சமுர்த்தி இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தில் நீடிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதார வளர்ச்சிக்கு நல்லதொரு உறுதுணையாக இருப்பதனால் அவர்களின் சுபீட்சத்தைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி மானியம் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை என அண்மையில் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

இதன்படி சமுர்த்தி மானியம் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here