ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும்

1083

‘Yahoo Finance’ இணையத்தளத்தின் படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும் போது ஏழை நாடுகளில் இலங்கை இருப்பதாகவும், இதன்படி ஆசியாவின் 20 ஏழை நாடுகளில் இலங்கை 17 வது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் குறித்த இணையதளம் குறிப்பிடுகிறது.

2021ல் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $5555 ஆக இருக்கும் என்று இணையதளம் கூறுகிறது.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடி, நாணயத் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக குறித்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

வட கொரியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சிரியா, நேபாள், மியன்மார், ஏமன், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், கம்போடியா, உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், டிமோர்-லெஸ்டே, வியட்நாம், லாவோஸ், பூட்டான், இலங்கை, பிலிப்பைன்ஸ், ஆர்மேனியா, மொங்கோலியா ஆகிய என 20 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

தகவல் : yahoo finance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here