தோட்டப் பகுதியில் இருந்து கொழும்புக்கு வந்த பெண்ணின் மரணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்!
குறிப்பாக தோட்டங்களை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் வறுமையால் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளனர் எனவும், இவ்வாறானதொரு நிலையில் வாழக்கை கொண்டு நடத்த கொழும்புக்கு வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், நீதி நியாயம் முறையாக நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், இது தொடர்பான சகல விசாரணைகளும் உடனடியாகவும் பக்கச்சார்பற்றதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு இவ்வாறு வருபவர்களுக்கு நீதி நியாயம் நிலைநாட்டப்படாது என்ற பாரிய சந்தேகம் குடிகொண்டுள்ளதாகவும், இந்த சந்தேகத்தை போக்க பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாரும் இன்று(24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கோரிக்கை விடுத்தார்.