பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைதான பெண் உயிரிழப்பு

256

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று நேற்று(24) இரவு குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, குறித்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here