நானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

79

2021 பருவத்தில் நெல் பயிரிடுவதற்காக நானோ திரவ உரங்களை இறக்குமதி செய்யும் போது கலப்படம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய, அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சீன கரிம உரக் கப்பலுக்கு பணம் செலுத்தியமை மற்றும் நானோ உரம் இறக்குமதி ஆகிய இரண்டும் நாட்டின் விவசாயத்திற்கு பயனளிக்காத இரண்டு நடவடிக்கைகள் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நானோ உரம் இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்த மனுக்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு விரிவான விசாரணையை ஆரம்பிக்க அமைச்சரவையின் அனுமதியின் பேரில் உரிய குழு நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here