இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்

745

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 26,561 ஆகும். சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என சபையின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தரம் எட்டாவது தேர்ச்சி பெற்றவர்கள் டிப்போ மேலாளர்களாக மாறியுள்ளதாகவும், கணக்கு, டெக்னிக்கல் உள்ளிட்ட பல பதவிகளில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சில தகுதியற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் தேர்தலின் பின்னர் டிப்போ நிர்வாகம் உள்ளிட்ட உயர் பதவிகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக அரசியல் தலையீடுகளைத் தடுப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here