பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம்

346

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

எவ்வித காரணங்களுக்காகவும் சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை அதிபர் வழங்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒன்லைன் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

இதனால் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமுகமளித்தோ அல்லது மின்னஞ்சலின் ஊடாகவோ அதனை செய்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here