சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

399

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக மாணவர்களுக்கான பேரூந்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here