சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்

935

சீனா முதல் தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் தமது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது.

இதனையடுத்து பீஜிங் விமான நிலையத்தில் மரியாதையின் அடையாளமாக இந்த விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் சர்வதேச சிவில் விமான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போயிங், ஏர்பஸ் போன்ற நிறுவனங்களுக்கு சீனா போட்டியை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எயார் பஸ் மற்றும் போயிங் கின் ஒற்றை இடைகழி ஜெட் விமானங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நம்பிக்கையில் இது சீனாவின் கொமர்ஷியல் ஏவியேஷன் கோர்ப்பரேஷனினால் தயாரிக்கப்பபட்டுள்ளது.

இந்தநிலையில் கோமாக் – ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 150 விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here