follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவிவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானம்

விவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானம்

Published on

எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று(30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான அணுகுமுறை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொடருமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதற்காக நிதியுதவி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க முடியும் என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்த பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் அதிகாரிகள், அது பற்றிய விடயங்களை விரிவாக முன்வைத்தனர்.

மேலும், உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...