follow the truth

follow the truth

June, 4, 2024
Homeஉள்நாடுகொரோனா பாதுகாப்பு உடைகள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியத்தில் தீ

கொரோனா பாதுகாப்பு உடைகள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியத்தில் தீ

Published on

பாணந்துறை கிரிபெரியவில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் உள்ள களஞ்சியசாலையில் கொரோனா உடைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க ஹொரண களுத்துறை மொரட்டுவ மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகள் அழைக்கப்பட்டன.

கொரோனா உடைகள், முகமூடிகள், சத்திரசிகிச்சையின் போது அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் உட்பட 11 தண்ணீர் பவுசர்கள் மற்றும் முப்பது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது கட்டிடத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும், தீ விபத்து தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் கெளரவம் பந்துவீச்சாளர்களின் கைகளில்

இலங்கை அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) தென்னாபிரிக்க அணிக்கு...

சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு

ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு பலியாகின்றனர் என புதிய...

பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும்

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க...