follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது - அரசாங்கம் உறுதி

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது – அரசாங்கம் உறுதி

Published on

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.

குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல் துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.

மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...