ஆப்கானிஸ்தானில் கல்யாணங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை

556

ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டு அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் 2021-ல் வெளியேறியவுடன், தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, பெண்களின் சுதந்திரம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் பள்ளிகள், கல்லூரி செல்வதும், பெண்கள் அலுவலகங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டு விட்டது. இது மட்டுமில்லாமல், கேளிக்கைகளில் ஈடுபடுவது மதத்திற்கு எதிரான குற்றம் என பிரகடனம் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மூலம் சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அமைச்சரவையின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி இனி ஆப்கானிஸ்தானில் திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதோ, இசை ஒலிபரப்பு செய்வதோ, பாடல்கள் பாடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது.

இசை என்பது மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் மனிதர்கள் மட்டுமே பாடல்களை பாட வேண்டும், என்றும் மிகக் கடுமையாக தலிபான் வலியுறுத்துகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here