கட்டுமானப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

281

நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களின் அனைத்துப் பணிகளும் அடுத்த ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்தார்.

அது சம்பந்மதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்போது நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய திட்ட அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் அமைச்சின் செயலாளர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஒப்பந்ததாரர்களுடன் இன்று (13) பத்தரமுல்லை சுஹுருபாயவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிர்மாணத்துறையை பாதுகாப்பதில் எமது அமைச்சு மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல், போராட்டம், டொலரின் பெறுமதி அதிகரிப்பு, நிர்மாணப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த நாட்டில் நிர்மாணத்துறைக்கு நல்ல நிலைமை இல்லை. இந்நிலைமையினால் ஒப்பந்ததாரர்களும் அரசாங்கமும் நகர அபிவிருத்தி அமைச்சும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.

தற்போது இயந்திரங்கள் பழுதடைந்து தொழிலாளர்கள் வெளிநாடு சென்று விட்டனர். கட்டுமானப் பணிகளுக்கு நிதி கிடைக்காததால், ஒப்பந்ததாரர்களைப் போலவே பணியாளர்களும் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். நீங்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவையிலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here