லெபனானில் வங்கிகள் சூறையாடல் – பணத்தை திருப்பிக் கேட்டு மக்கள் போராட்டம்

386

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல வங்கி கட்டிடங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள்.

பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடி நிலை உருவாகக் காரணமான அதிகாரிகளில் அரசியல் தொடர்புடையவரான சலாமே குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

பல மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைகளை நீக்கி, ஒரு அதிபரை தேர்வு செய்ய லெபனான் நாடாளுமன்றத்தால் 12-வது முறையாக இயலாமலிருக்கும் சூழ்நிலையில் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here