ஐ.எஸ் அமைப்பில் இணைந்த குற்றம் மற்றும் யஸீதி இனப் பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த குற்றத்திற்காகவே இந்த பெண்ணுக்கு 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தமை ஆகியவற்றிலும் குறித்த பெண் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் வசித்த 37 வயதான இளம் யஸீதி இனப்பெண்ணை தனது கணவரை வைத்து வன்புணர்வு செய்ததாகவும் சுமார் 03 ஆண்டுகள் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
“நடின் கே” என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த குற்றவாளிப்பெண் மற்றும் அவரது கணவர் சிரியாவின் குர்திஷ் படைகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டனர்.
அதன் பின்னரே ஜெர்மன் பொலிஸார் குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். அதன் படியே மேற்குறித்த பெண்ணுக்கு 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.