நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.