வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

561

வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.

வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தேச துரோகமாகும். நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம்.

வாக்னர் ஆயுதக் குழுவின் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here