ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூலை 06

313

பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை முதல் 07 ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜூலை 05 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் 10.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.30 மணிக்கு பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான எட்டு (08) பிரேரணைகள் விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன.

ஜூலை 06 ஆம் திகதி ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here