35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை

1460

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய அமைச்சர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தகுந்த சூழல் உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் செய்துக்கொண்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்பதோடு, அவர்களின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், புதிய விநியோகஸ்தர்களின் விநியோகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் காரணமாக இதுவரை நிதி நெருக்கடியில் இருந்த மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் நிதி ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

“புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் பலனாக கடந்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளை இல்லாமல் செய்து தொடர்ச்சியாக மின்வெட்டு செய்யப்படுவதையும் தடுக்க முடிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்திலும், ஜூன் மாத்திலும் மின்சார கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வீடுகளுக்காக மின்சாரத்தை பாவனை செய்வோர் எண்ணிக்கை 60 இலட்சமாக காணப்படுகின்றது. அவர்களில் 30 – 60 மின் அலகுகளை பாவனை செய்யும் 35 இலட்சம் பேருக்கு 55 ரூபாவினால் கட்டணக் குறைப்புச் செய்யப்பட்டது. அதேபோல் பதிவு செய்யப்ட்டிருக்கும் 40,000 வழிபாட்டுத் தலங்களில் 30 அலகுக்கும் குறைவாக பாவனை செய்யும் 15,000 வழிபாட்டுத் தலங்களுக்கும், தொழிற்துறைகளுக்கும் கட்டணக் குறைப்பு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிந்தது.

கடந்த காலத்தில் மின்சர சபை 409 பில்லியன் நட்டமீட்டியிருந்தது. அவற்றில் கடந்த வருடத்தின் நட்டம் மாத்திரம் 167.2 பில்லியன்களாக பதிவாகியிருந்த்து. அதனால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியிருந்தன.

எவ்வாறாயினும் தற்போது அனைத்து விநியோகஸ்தர்களுக்குமான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. மீள்புதுப்பிக்கத்க்க மின் சக்தி வேலைத்திட்டங்களை புதிதாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 120 பில்லியன்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும் அரசாங்கம் அந்த தொகையை பொருட்படுத்தவில்லை.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் செப்டம்பர் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் செய்துக்கொண்டுள்ளது.

இவர்களது கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் சிபெட்கோ என்ற பெயரில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் அவர்களது நிறுவனத்தின் பெயரிலேயே விநியோகிக்கப்படும்.

இந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் போது, ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபா வரி அறவிடுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன் மூலம் இந்தியா , ஈரானிடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்தி முடிக்கும் அதேநேரம் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடன்களைவும் விரைவில் செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here