மரக்கறிகளின் விலை 70% உயர்வு

434

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

கேக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி ஆகியவை மட்டுமே 100 ரூபாவுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் போஞ்சி, கோவா, லீக்ஸ், பீட்ருட் போன்றவை 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அத்தோடு மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மலையகத்தில் சீரற்ற வானிலை தொடர்வதால் விளைச்சல்கள் குறைவடைந்து சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here