நஷ்டத்தில் ஓடும் டுவிட்டர்

338

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார்.

டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் இலாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தள்ளார்.

ஒரு நாளில் இத்தனை டுவிட்களை மட்டும் தான் பயனாளர்கள் பார்க்க முடியும் என டுவிட்டரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் டுவிட்டர் இன்னும் பணத்தை இழக்கிறது. நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here